வங்கதேசத்தில் இந்துமத துறவி சின்மயி தாஸ் கைது செய்யப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து ரங்பூரில் துறவி சின்மயி தாஸ் தலைமையில் பெரும் போராட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக சின்மயி தாஸ் கைது செய்யப்பட்டார். இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினர் பாதுகாப்பையும் வங்கதேச அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
Next Story