தோப்புக்கரணம் போட்டு தனக்கு தானே தண்டனை கொடுத்த தலைமை ஆசிரியர்

x

தோப்புக்கரணம் போட்டு தனக்கு தானே தண்டனை கொடுத்த தலைமை ஆசிரியர் - கல்வித்துறை அமைச்சர் கொடுத்த ரியாக்சன்

ஆந்திர மாநிலம், போப்பிலியில் உள்ள பள்ளியில் பணிப்புரிந்து வரும் தலைமை ஆசிரியர் ரமணா, கல்வியில் மாணவர்கள் பின்தங்கியுள்ளதாக கவலை தெரிவித்து, தோப்புக்கரணம் போட்டு தனக்கு தானே தண்டனை கொடுத்து கொண்டார்.

சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவை பார்த்த அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ், பள்ளி குழந்தைகளை ஊக்குவித்தால் பல சாதனைகளை செய்வார்கள் என்றும், அவர்களை தண்டிக்காமல் புரிந்து கொள்ளும் உங்கள் அணுகுமுறை நல்ல யோசனை என்றும் குறிப்பிட்டு ஆசிரியருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்