இளம்பெண் வயிற்றில் 1.5 கிலோ கருகரு உருண்டை.. என்னவென்று தெரிந்ததும் திகிலடித்த டாக்டர்கள்
புதுச்சேரியில், 17 வயது இளம்பெண்ணின் வயிற்றில் இருந்த ஒன்றரை கிலோ தலை முடியை, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். கடும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணை பரிசோதித்ததில், வயிற்றினுள் முடிப்பந்து இருந்தது கண்டறியப்பட்டதுடன், இளம்பெண்ணுக்கு முடியை விழுங்கும் பழக்கம் இருந்ததும் தெரிய வந்தது. சுமார் 90 நிமிடம் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், பெண்ணின் வயிற்றிலிருந்த முடிப்பந்தை அகற்றினர்.
Next Story