மாரடைப்பால் 8 வயது சிறுமி உயிரிழப்பு..பள்ளியில் நடந்த சோகம்..கேமிராவில் பதிவான இறுதி காட்சிகள்

x

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கார்கி ரான்பரா என்ற 8 வயது சிறுமி, தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற சிறுமி, படியில் ஏறியபோது அசெளகரியமாக உணர்ந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த சிறுமி, திடீரென மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்த ஆசிரியை முதலுதவி செய்த நிலையிலும் சிறுமியிடம் அசைவு இல்லாததால், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிறுமியின் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்