ஹேய் எப்புட்றா? - காருக்கு பதிலாக ஆட்டோ ஓட்டி லைசென்ஸ் வாங்கிய நபர்

x

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் 20 வயது மகன், இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு, ஓட்டுநர் உரிமத் தேர்வில் ஐந்து முறை தோல்வியடைந்தார். இதற்கு முன்பு மூன்று முறை கற்றல் உரிமத்திற்கு விண்ணப்பித்திருந்தார். ஐந்து முறை முயன்று தோல்வியடைந்த நிலையில், ஆறாவது முயற்சியில், காருக்கு பதிலாக ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டி தேர்வில்தேர்ச்சி பெற்றுள்ளார். இலகுரக வாகன வாகனங்கள் பிரிவில் கார்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள், டாக்சிகள், மினி பேருந்துகள் மற்றும் மினி டிரக்குகள் போன்றவை வருவதால் இதே முறையைப் பயன்படுத்தி ஒரு மருத்துவர் சமீபத்தில் சோதனையில் தேர்ச்சி பெற்றார். ஆட்டோ ரிக்‌ஷாவில், ஓட்டுநர் இருக்கையில் இருந்து இருபுறமும் தெளிவாகத் தெரியும் என்பதால் இதை பயன்படுத்தி அந்த இளைஞர் ஓட்டுனர் உரிமத்தை பெற்றுள்ளார். அதே சமயத்தில், 15 முதல் 20 சதவீதம் பேர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுவதிலும் தோல்வி அடைகிறார்கள்ள் என ஆர்டிஓ அதிகாரிகள் கூறுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்