இரண்டு உலகப்போர்களை கண்ட உலகின் மிக வயதான நபர் காலமானார் | Japan

x

உலகின் மிக வயதான நபராக அறியப்பட்ட ஜப்பானின் டோமிகோ இடூகா Tomiko Itooka வயது மூப்பு காரணமாக காலமானார். கடந்த மாதம் 29-ம் தேதி, ஹியோகோ Hyogo மாகாணத்தின் ஆஷியா Ashiya நகரில் உள்ள காப்பகத்தில், இடூகா உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இடூகா, கடந்த 1908-ம் ஆண்டு மே 23 ஆம் தேதி, ஒசாகாவில் பிறந்தார். இரண்டு உலகப்போர்களை கண்ட இடூகா, சுமார் பத்தாயிரம் அடி உயரமுள்ள மவுண்ட் ஒன்டேக்-ஐ Mount Ontake இருமுறை ஏறி சாதனை படைத்துள்ளார். இடூகாவிற்கு இரு மகன்கள், இரு மகள்கள், 5 பேரக்குழந்தைகள் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்