பக்தர்கள்...திருப்பதியையே திரும்பிப் பார்க்க வைத்த "தங்கமான" குடும்பம்

x

தங்கம் விற்கும் விலைக்கு ஒரு கிராம் தங்கம் வாங்குவதே பலருக்கும் கனவாகிப் போன சூழலில்...

நடமாடும் தங்க நகைக்கடையாய்... திருப்பதிக்கு வந்த இந்தக் குடும்பத்தைக் கண்டு ஏழுமலையானே புருவத்தை உயர்த்தி இருப்பார்...

மகாராஷ்டிரா மாநிலம்... புனேவைச் சேர்ந்தவர்கள் தான் சன்னி... சஞ்சய் தத்தாத்ரய்யா குஜார்... ப்ரீத்தி சோனி...

எப்போதும் பெண்கள் தானே அதிக நகைகள் அணிந்து பார்த்திருப்போம்...

என்னதான் ப்ரீத்தி சோனி கழுத்து கனக்க நகைகள் அணிந்திருந்தாலும்... அவரை ஓவர்டேக் செய்து விட்டனர் சன்னியும்... சஞ்சயும்...

ஒவ்வொரு நகையும்... வெவ்வேறு ரகம்...

கோவிலில் இருந்த அனைவரின் பார்வையும் இம்மூவரின் மீதுதான்...

சாமி கும்பிட வந்தவர்கள் வந்த வேலையை மறந்து விட்டு வாய் பிளந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்...

பலர் இவர்களுடன் போட்டி போட்டு செல்ஃபி எடுக்க முயன்றனர்...

திருப்பதியையே தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து அசரடித்து விட்டனர் இந்த "தங்கமான" குடும்பத்தினர்...


Next Story

மேலும் செய்திகள்