"இந்தியாவிற்கு எதிராக வெளிப்படையான போரை அறிவித்த ஜார்ஜ் சோரஸ்" வெடிக்கும் பிரளயம்

x

"இந்தியாவிற்கு எதிராக வெளிப்படையான போரை அறிவித்த ஜார்ஜ் சோரஸ்" வெடிக்கும் பிரளயம்

இந்தியாவிற்கு எதிராக வெளிப்படையான போரை அறிவித்த ஜார்ஜ் சோரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் என்ன உறவு என்று, மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேள்வி எழுப்பினார்.

அதானி விவகாரம் மற்றும் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசையும் காங்கிரஸ் கட்சியையும் தொடர்புபடுத்தி, பாஜக எம்பி நிஷிகாந்த் தூபே கருத்து தெரிவித்தார். இதை அவை குறிப்பிலிருந்து நீக்க வலியுறுத்தி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். அப்போது குறிப்பிட்டு பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அமெரிக்க தொழில் அதிபர் ஜார்ஜ் சோரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள், பாஜக உடையது அல்ல, பொதுவெளியில் உள்ள அறிக்கை எனக் குறிப்பிட்டார். நாட்டின் நலன் என்று வரும்போது நாம் அனைவரும் ஒன்றுபட்டு உறுதுணையாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டவர், இந்தியாவுக்கும் இந்திய அரசுக்கும் எதிராக வெளிப்படையாக போரை அறிவித்தவர் ஜார்ஜ் சோர்ஸ் என்றார். அவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் என்ன உறவு என கேள்வி எழுப்பினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் முழக்கங்களை எழுப்பியதால் மக்களவை நாளை காலை வரை ஒத்தி வைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்