டெல்லியில் ஜி-20 மாநாடு - 207 ரயில்கள் ரத்து
டெல்லியில் ஜி-20 மாநாட்டையொட்டி, 207 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. டெல்லியில் ஜி20 மாநாடு வரும் 9, 10ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி, 9, 10 மற்றும் 11ம் தேதிகளில் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதன்படி, டெல்லி மார்க்கத்தில் செல்லும் 207 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 36 ரயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
Next Story