மீண்டும் வெடிக்கும் போராட்டம்... "நாடு முழுவதும் எங்களுக்காக குரல் கொடுங்கள்" பரபரப்பு

x

டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தை மீண்டும் தொடங்கிய விவசாயிகளை, ஷம்பு எல்லையில் ஹரியானா போலீசார் தடுத்து நிறுத்தினர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 101 விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில், டெல்லி செல்ல முயன்ற அவர்களை ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்திய போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகள் கூட்டத்தை கலைத்தனர். தொடர்ந்து, ஹரியானா போலீசார் தங்கள் போராட்டத்தை தவறாக சித்தரிப்பதாக குற்றம்சாட்டிய விவசாயிகள், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தங்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமென தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்