எதிர்வீட்டிற்கு பொருளை கொடுக்க டெலிவரி பாயை கூப்பிட்ட குடும்பம் - அதிர்ச்சி காரணம்.. வைரல் வீடியோ

x

எதிர் வீட்டிற்கு பொருளை டெலிவரி செய்வதற்கு டெலிவரி பாய்யை அழைத்த நிகழ்வு உத்தர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் தங்களிடம் இருக்கும் வீடியோ கேமை எதிர்புறம் இருக்கும் குடியிருப்பில் உள்ள ஒரு குடும்பத்தினரிடம் வழங்குவதற்காக போர்ட்டர் செயலியில் புக் செய்துள்ளனர். சுமார் ஐந்து மீட்டர் தொலைவில் இரண்டு நிமிடங்கள் மட்டுமே தூரம் கொண்ட இடத்திற்கு கூட நேரில் செல்லாமல் டெலிவரி பாய்யை வரவழைத்து பொருளை வழங்கியுள்ளனர். இது தொடர்பாக டெலிவரி பாய் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்