நீட் நுழைவுத் தேர்வு Online-ஆ?.. Offline-ஆ? - மத்திய கல்வி அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். தேசிய தேர்வு முகமையில் சீர்திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக உயர்மட்ட குழு அமைக்கப்பட்டிருந்ததாக கூறிய அவர், அந்தக் குழு வெளியிட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார். தேசியத் தேர்வு முகமை அடுத்த ஆண்டு முதல் உயர்கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை மட்டுமே நடத்தும் என்றும், பணியிடங்களுக்கு நடத்தப்படும் ஆள் தேர்வுகளை நடத்தாது என்றும் தெரிவித்தார். இளங்கலை நீட் நுழைவுத் தேர்வை பேனா, பேப்பர் அடிப்படையில் நடத்துவதா அல்லது ஆன்லைனில் நடத்துவதா என்பது குறித்து சுகாதார அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தப்பட்ட வருவதாக கூறினார். தேசிய தேர்வு முகமை அடுத்த ஆண்டு மாற்றி அமைக்கப்பட இருப்பதாகவும், அதில் புதிதாக 10 பதவிகள் உருவாக்கப்பட இருப்பதாக தெரிவித்தார். எதிர்காலத்தில் கம்ப்யூட்டர் அடாப்டிவ் தேர்வு தொழில்நுட்பம் சார்ந்த நுழைவுத் தேர்வுகளுக்கு செல்ல அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.