EVM ஓட்டு மெஷின் மாடலுக்கு பாடை கட்டியதால் பரபரப்பு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிராக, மகாராஷ்டிரா மாநிலம் துலே நகரில் உத்தவ் தாக்கரே சிவசேனா அணியினர் ஊர்வலம் சென்றனர். அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில், ஈ.வி.எம். இயந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டதாக, அம்மாநில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், உத்தவ் தாக்கரே சிவசேனா அணியினர், பாடை கட்டி, ஈ.வி.எம். இயந்திரத்தின் மாதிரியை வைத்து ஊர்வலமாக தூக்கிச் சென்றனர். கையில் தீப்பந்தங்களை ஏந்திக்கொண்டு, ஈ.வி.எம். இயந்திரத்தின் பயன்பாட்டுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். காந்தி சிலை வரை ஊரவலமாக சென்ற உத்தவ் தாக்கரே அணியினர், அங்கு பாடைக்கு தீ வைத்து முழக்கங்களை எழுப்பினர்.
Next Story