தேர்தல் பத்திரம்..SBI-க்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றம் சொன்ன தகவல்
தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விரைந்து விசாரிப்பதற்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.தேர்தல் நிதி பத்திரங்களை வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இதுவரை பெறப்பட்ட தேர்தல் நிதி பத்திர விவரங்களை மார்ச் 6-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஸ்டேட் பேங் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. காலக்கெடு முடிந்துள்ள நிலையில், கால நீட்டிப்பு கேட்டு ஸ்டேட் பேங் ஆப் இந்தியா மனு தாக்கல் செய்துள்ளது. அதில், காலக்கெடுவை ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்கும் காலக்கெடுவை மீறியதற்காக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி ஏ டி ஆர் அமைப்பு முறையிட்டது. அதனை பரிசீலித்த தலைமை நீதிபதி, அனைத்து நடைமுறைகளும் முடித்த பிறகு மின்னஞ்சல் செய்யுங்கள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விரைந்து விசாரிப்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.