"உணர்ச்சிகளை தூண்டிவிட்டு வாக்குகளை அறுவடை செய்யக்கூடாது" - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
நாட்டுக்கு யார் நன்மை செய்துள்ளார்கள் என்பதை சிந்தித்துப் பார்த்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டுமென, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில், விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் பேசிய அவர், இந்தியாவின் பெருமை உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார். உணர்ச்சிகளை தூண்டிவிட்டு வாக்குகளை அறுவடை செய்வது விரும்பத்தக்கது அல்ல என்றும், இத்தகைய போக்கு சமூகத்தின் ஒற்றுமையை பாதிக்கும் என்பதால் அதனை நாம் புறந்தள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
Next Story