5 டாக்டர் மாணவர்கள் அகால மரணம்.. ICU-வில் 4 பேர்.. டவேரா காரை வெட்டி வெளியே வந்த உடல்கள்
கேரள மாநிலம் ஆலப்புலா வந்தனம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் திரைப்பட பார்த்துவிட்டு திரும்பும் போது குறுகலான ரோட்டில் அதிவேகமாக வந்ததால் எதிரே வந்த விரைவு அரசு பேருந்து மீது இவர்கள் வந்த டவேரா கார் மோதியது. இந்த காரில் 11 மாணவர்கள் வந்துள்ளனர் விபத்து நடந்த சம்பவ இடத்தில் மூன்று மாணவர்கள் உயிரோடு உள்ளனர் இரண்டு மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்தனர் மேலும் நான்கு மாணவர்கள் படுகாயம் உங்களுடன் வந்தனம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் விபத்தில் சிக்கியவர்கள் காரை வெட்டி வெளியே எடுத்தனர். இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது.
உயிரிழந்தவர்கள் 1 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்கள் ஸ்ரீதீப் (பாலக்காடு), முஹம்மது இப்ராஹிம் (லட்சத்தீவு), தேவானந்த், முஹம்மது ஜப்பார் (கண்ணூர்) மற்றும் ஆயுஷ் ஷாஜி (ஆலப்புழா) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக பார்வை மங்கலானதே விபத்துக்குக் காரணம் என சந்தேகிக்கப்படுவதாகவும் மோட்டார் வாகனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஆய்வு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் பதிலளித்தனர்.