தன்னுடைய முக ஜாடையில் மகளின் நெருங்கிய தோழி.. DNA டெஸ்ட் எடுத்து பார்த்த தாய்.. அதிர்ச்சி உண்மை
தன்னுடைய முக ஜாடையில் மகளின் நெருங்கிய தோழி.. DNA டெஸ்ட் எடுத்து பார்த்த தாய்.. அதிர்ச்சி உண்மை அம்பலம்
ஒரே தேதியில் பிறந்த 2 பெண் குழந்தைகள், மருத்துவமனை ஊழியர்கள் செய்த தவறால் பெற்றோர் மாறி ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர். வருடங்கள் பல கழித்து இருவரும் தங்களின் பெற்றோரிடத்தில் சேர்ந்த சினிமாவை மிஞ்சும் சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
இரு தம்பதிகளை அதிர்ச்சியின் உச்சத்தில் உறைய வைத்து, நம்மை ஆச்சரியத்தில் வியக்க வைக்கும் இந்த சம்பவம் வியட்நாம் நாட்டில் நடந்திருக்கும் ஓரு உண்மைச் சம்பவம்...
பல வருடங்களுக்கு முன்பு ஒரே மருத்துவமனையில் பிரசவித்த இரு பெண்களுக்கும் பெண் குழந்தைகள் பிறந்திருக்கின்றனர்..
இந்நிலையில், அந்த இரு பெண்குழந்தைகளும் மருத்துவமனை ஊழியர்கள் செய்த தவறால் பெற்றோர் மாறி மாறி ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர்...
ஆனால், விதியோ... இரு பெண் குழந்தைகளையும் நம்மூர் குஷி பட பாணியில் நெருங்கிய தோழிகளாகவே வளரச் செய்து வந்திருக்கிறது..
இதனிடையே, இரு குழந்தைகளின் பெற்றோருக்கு குழந்தை தங்களின் சாயலில் இல்லையென்றதொரு கவலை தொற்றிக் கொண்டுதான் இருந்திருக்கிறது...
இந்நிலையில்தான் இந்த ட்விஸ்ட்...
எதிர்பாராதவிதமாக ஒரு பெண்ணின் தாயை இருவரும் ஒரு கட்டத்தில் சந்திக்க, அந்த தாய் தன் முகச்சாடையில் இருக்கும் அந்த பெண்னை கண்டு ஆச்சர்யமடைந்திருக்கிறார்..
உடனே, அப்பெண்ணின் தாய், அவர் எங்கு பிரசவித்தார் என்பதை அறிந்து மேலும் ஆச்சர்யத்துக்குள்ளாகி, இறுதியில் தன் முகச்சாடையில் இருக்கும் பெண்ணுடன் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொண்டதில் இந்த சினிமாவை மிஞ்சும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது...