கோவிலுக்குள் காலணியுடன் செல்ல முயன்ற பக்தர்கள் 7 ஊழியர்களுக்கு பாய்ந்த அதிரடி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், இரண்டு பக்தர்கள் காலணியுடன் பிரதான நுழைவாயிலுக்கு நடந்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரத்தில், பணியில் அலட்சியமாக இருந்த தேவஸ்தான ஊழியர்கள் இரண்டு பேர், தேவஸ்தான விஜிலன்ஸ் துறையை சேர்ந்த ஐந்து பேர் உட்பட ஏழு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பக்தர்கள் இருவரும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் டிஸ்போசபில் செருப்புகளை அணிந்து திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபம் வழியாக ஏழுமலையானை வழிபட செல்ல முயன்றது தெரியவந்துள்ளது. பக்தர்களின் காலில் செருப்பு இருப்பதை கவனித்து அவர்களை ஊழியர்கள் தடுத்து நிறுத்தி செருப்பை கழற்ற செய்தனர். பின்னர் அந்த பக்தர்கள் சாமி கும்பிட அனுப்பி வைக்கப்பட்டனர்.
Next Story
