"கொடுத்த மிரட்டல்...தள்ளிய ராகுல்...மண்டை உடைப்பு - நாடே கொந்தளிப்பு...அப்படி அமித்ஷா சொன்னது என்ன?

x

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புயலை கிளப்பியது மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு...

கடந்த 17ம் தேதி நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் விவாதத்தின் போது, அம்பேத்கர் பெயரை பயன்படுத்துவது தற்போது ஃபேஷனாகி விட்டது. அம்பேத்கர்..அம்பேத்கர்..அம்பேத்கர்...இந்த அளவுக்கு கடவுளின் பெயரை பயன்படுத்தியிருந்தால் ஏழு பிறவிகளுக்கும் சொர்க்கத்தை அடையலாம்... என பேசியிருந்தார்.

இந்த காணொலி வெளியாகி சர்ச்சையை கிளப்ப, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன..

இது தொடர்பாக, மனுஸ்மிருதியை நம்புவோருக்கு அம்பேத்கருடன் நிச்சயம் பிரச்சினை இருக்கும் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி...

இதற்கிடையில், தனது உரை குறித்து விளக்கம் அளித்திருந்தார் அமித்ஷா. நாடாளுமன்றம் போன்ற நாட்டின் மிக உயர்ந்த ஜனநாயக மன்றத்தில் விவாதம் நடைபெறும் போது, அது உண்மைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி உண்மைகளை திரித்து பேசிய விதத்தை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்தார்.

அத்துடன், இதற்கு முன்பு நரேந்திர மோடியின் கருத்துகளை திரித்து கூறியதாகவும், எனது அறிக்கைகளை AI பயன்படுத்தி திரித்ததாகவும் கடுமையாக சாடியிருந்தார்..

முற்றுப் பெறாமல் இவ்விவகாரம் போராட்டம் வரை வெடித்துள்ள சூழலில், நாடாளுமன்றத்தில் அமித்ஷாவுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர் எதிர்க்கட்சிகள்.


Next Story

மேலும் செய்திகள்