எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கப்படுமா? - பரபரப்பு நோட்டீஸ் | Thanthi TV

x

துணை குடியரசு தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜெக்தீப் தங்கருக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் பல விவகாரங்களில் முரண்பாடு தொடர்கிறது. அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் உடன் காங்கிரஸ் கட்சி மற்றும் சோனியா காந்திக்கு தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம் சாட்டிய விவகாரத்தில், ஜெக்தீப் தங்கர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன. இந்த சூழலில் மாநிலங்களவை ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி சார்பில் ஜெக்தீப் தங்கர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவதாக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 71 எம்.பி.க்கள் கையெழுத்தோடு மாநிலங்களவை பொதுச் செயலாளரிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகள்படி எதிர்க்கட்சிகள் அவைதலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களில் 14 நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் வழங்க வேண்டும். ஆனால் இப்போது மாநிலங்களவை டிசம்பர் 20 ஆம் தேதியோடு நிறைவடைய உள்ளது. 14 நாள் கெடுவை பூர்த்தி செய்யாததால் இந்த நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் நடப்பு கூட்ட தொடரில் அனுமதிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்