க்ரீன் சிக்னல் காட்டி அனுமதி கொடுத்தது உச்சநீதிமன்றம்

x

டெல்லியில் குளிர்காலம் தொடங்கி காற்று மாசு அதிகரித்து, காற்றின் தரக்குறியீடு அபாய கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக, டெல்லி காற்று தர மேலாண்மை ஆணையம் 4-ம் நிலை மாசு தடுப்பு கட்டுப்பாடுகளை அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்நிலையில்,

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன்பு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும்,மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் ஆஜராகி,

டெல்லியில் காற்று மாசு கட்டுப்படுத்த முடியாத அளவில் உள்ளதாகவும், எனவே காணொலியில் ஆஜராகி வாதிட வழக்கறிஞர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் முறையிட்டார். இதற்கு தலைமை நீதிபதி, காணொலியில் ஆஜராகி வாதிட வழக்கறிஞர்களை அனுமதிக்க நீதிபதிகளிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். எனினும், உச்சநீதிமன்றம் காணொலியில் மட்டுமே இயங்கும் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க மறுத்துவிட்டார்


Next Story

மேலும் செய்திகள்