குடியரசு தினவிழா அலங்கார ஊர்தி அணிவகுப்பு - தேர்வான 15 மாநிலங்கள் எவை?
டெல்லியில் ஆண்டுதோறும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இதில், பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்திகள், துணை ராணுவத்தின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். அந்த வகையில், ஜனவரி 26-ல் நடைபெறும் குடியரசு தின விழா அணி வகுப்பில், 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணி வகுக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஆந்திரா, பீகார், சண்டிகர், தாதர் நகர் ஹவேலி & டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், திரிபுரா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவை தவிர கூடுதலாக 11 அமைச்சகங்கள் மற்றும் மத்திய அரசின் துறைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
Next Story