திருட்டுக்கு கான்ட்ரக்ட் போட்டு ஆள் இறக்கிய சம்பவம்-கல்யாண வீடுதான் டார்கெட்

x

திருமண நிகழ்ச்சிகளில் திருடுவதற்காக, ஒப்பந்த அடிப்படையில் திருடர்கள் மத்தியப் பிரதேசத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட சம்பவம் தலைநகர் டெல்லியை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

திருமண நிகழ்ச்சிகளில், அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் போல், கூட்டத்தோடு கூட்டமாக கலந்து இந்த கும்பல் திருடுவது வழக்கம் என சொல்லப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள கடியா மற்றும் குல்காஷி கிராமங்களைச் சேர்ந்த 4 பேரை டெல்லி போலீசார் தற்போது கைது செய்திருக்கின்றனர். இந்த திருட்டு கும்பலில் குழந்தைகளும் பெண்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், அலிபூர், ஹரியானா ஹிசார், மைதான் கர்ஹி உள்ளிட்ட பல பகுதிகளிலும் இது மாதிரியான திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை போலீசார் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்நிலையில், கும்பலின் தலைவன் ராஜு என்பவரிடம் இருந்து 5 மொபைல் போன்கள் மற்றும் 13 சிம்கார்டுகளை பறிமுதல் செய்திருக்கும் போலீசார், தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்