வீடியோவை பார்த்து அலறிய இளம்பெண் - தமிழகத்தில் புகுந்து அதிரடி கைது செய்த டெல்லி போலீசார்

x

திண்டுக்கல் அருகே திமுக நிர்வாகியின் சிம் கார்டு மூலம், டெல்லி பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய, கணினி பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த ஹரிபிரதீப் என்பவர், தேனியில் கணினி பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வத்தலகுண்டுவை சேர்ந்த திமுக நிர்வாகியின் தொலைந்து போன சிம்கார்டை எடுத்த ஹரிபிரதீப், டெல்லியில் உள்ள இளம்பெண்ணுக்கு ஆபாச வீடியோ மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில், டெல்லி போலீசார் தமிழகம் விரைந்து விசாரித்தனர், தொடர்ந்து வத்தலக்குண்டில் பதுங்கியிருந்த ஹரிபிரதீப்பை கைது செய்து, டெல்லி போலீசார் அழைத்துச் சென்றனர். மேலும் வேறு சில பெண்களுக்கு ஆபாச வீடியோ மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பி உள்ளாரா என்ற கோணத்தில், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்