மெட்ரோ ரயிலில் சீட் பிடிக்க குடுமிபிடி சண்டை போட்ட பெண்கள் - வைரலாகும் வீடியோ

x

மெட்ரோ ரயில் இருக்கையில் அமர்வதற்காக இரண்டு பெண்கள் குடுமிபிடி சண்டையிடும் விடியோ வைரலாகி வருகிறது. டெல்லி மெட்ரோ ரயிலின் இருக்கையில் அமர்ந்திருக்கும் பெண் ஒருவரிடம், மற்றொரு பெண் நகர்ந்து அமரும்படி கேட்க, அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதனால் இரண்டு பெண்களுக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி ஒருவரின் தலை முடியை மற்றொருவர் பிடித்து இழுத்து குடுமிபிடி சண்டையிட்டு கொண்டனர். மற்ற பெண்கள் இருவரையும் சமாதானம் செய்த நிலையில் இந்த காட்சி தற்போது வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்