திடீரென கொழுந்துவிட்டு எரிந்த தீ - தலைநகரில் அதிர்ச்சி | Delhi
திடீரென கொழுந்துவிட்டு எரிந்த தீ - தலைநகரில் அதிர்ச்சி
டெல்லி பவானா பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில், இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. தீ விபத்தை தொடர்ந்து கரும்புகை வெளியேறிய நிலையில், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story