தலைநகர் நோக்கி நகர்ந்த பெரும் படை..போலீசார் செய்த அதிர்ச்சி செயல் - பரபரப்பு காட்சிகள்

x

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி செல்ல முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசி போலீசார் கலைத்தனர்.வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா விவசாயிகள், டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தை கடந்த வாரம் முன்னெடுத்தனர். இரண்டு முறை டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி தடுத்து நிறுத்தினர். இதில் சிலர் காயமடைந்ததால் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்தனர். அவர்களை ஷம்பு எல்லையில் போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தி, தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். இதற்கிடையே, முன்னாள் மல்யுத்த வீரரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான பஜ்ரங் புனியா போராட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்