"இதுபோன்ற ஒரு ஜனநாயக கூத்து இதுவரை நடந்ததில்லை" - ஜேபிசி தலைவரை சாடிய M.P ஆ.ராசா
வக்பு சட்ட திருத்த மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டு குழுவில் எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்த தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் வழங்கிய தீர்மானங்கள் ஏற்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. ஆ.ராசா, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவராக இருக்கும் ஜெகதாம்பிகா பால், அவரே தீர்மானத்தை முன்மொழிந்து, அவரே வாக்கிட்டு அவரே வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டதாக விமர்சித்தார். இதுபோன்ற ஒரு ஜனநாயக கூத்து இந்திய வரலாற்றிலேயே இதுவரை நடந்ததில்லை என்றும் ஆ.ராசா சாடினார்.
Next Story