"காங்கிரஸ் - ஆம் ஆத்மி திரைமறைவில் கூட்டணி" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

x

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சியினர் திரைமறைவில் கூட்டணி வைத்துள்ளதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். கர்தார் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், கடந்த 25 ஆண்டுகளில், ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி, டெல்லியின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை என விமர்சித்தார். தேர்தலில் ஆம் ஆத்மி தோற்றால், காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என இரு கட்சிகளும் உடன்பாடு செய்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். தொடர்ந்து, பாஜகவிற்கு ஒரு வாய்ப்பு கோரிய பிரதமர், ஆட்சிக்கு வந்த பின் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்