``அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அரசியல் சாசனம் மீது நம்பிக்கை இல்லை'' - ராகுல் காந்தி விமர்சனம்
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகமான இந்திரா பவன் துவக்க விழாவில் உரையாற்றிய ராகுல் காந்தி, இந்த கட்டிடம், கோடிக்கணக்கான மக்களின் கடின உழைப்பு மற்றும் தியாகத்தின் விளைவாகும் எனக் கூறினார். நமது விடுதலைப் போராட்டத்தின் பலன் தான் இந்திய அரசியல் சாசனம் எனவும், ஆனால் அரசியல் சாசனம் நமது சுதந்திரத்தின் சின்னம் அல்ல என்று மோகன் பகவத் நேற்று மறைமுகமாக விமர்சித்ததாக குறிப்பிட்டார். அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்திய தேசியக் கொடியை வணங்குவதில்லை என்றும், அவர்களுக்கு இந்திய அரசியல் சாசனத்தின் மீதும், தேசியக்கொடி மீதும் நம்பிக்கை இல்லை என விமர்சித்தார்.
Next Story