திடுதிப்பென திரண்ட பாஜகவினர்... சுத்துப்போடப்பட்ட கெஜ்ரிவால் இல்லம்... பரபரப்பு காட்சி

x

டெல்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கண்டித்து, டெல்லி பாஜகவினர் அவரது இல்லத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுடெல்லி சட்டப்பேரவை தொகுதியில் பூர்வாஞ்சல் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை அதிகளவு போலி வாக்காளர் பட்டியலில் பாஜக சேர்த்திருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருந்தார். பூர்வாஞ்சல் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த போலி வாக்காளர்கள் எனக்கூறி அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களை அவமதித்து விட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. போராட்டம் நடத்து சென்ற பாஜகவினரை காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்