டீப்ஃபேக் வழக்கு.. "முடியாது".. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

x

தேர்தல் பிரசாரம் குறித்த டீப்ஃபேக் வீடியோக்கள் பரவுவதைத் தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தேர்தல் நேரத்தில் டீப்ஃபேக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்கத் தேர்தலை ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி, தேர்தல் ஆணையம், மத்திய அரசு உள்பட அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை நம்புவதாகவும், இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையத்திடமே விட்டுவிடுவதாகவும் கூறினார். டீப்ஃபேக் வீடியோ விவகாரம் தொடர்பான மனுதாரர் அளிக்கும் கோரிக்கை மனு தொடர்பாக திங்கள்கிழமைக்குள் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்