புதுச்சேரியில் சூறாவளி எச்சரிக்கை.. - வானிலை மையம் அதிர்ச்சி தகவல்
புதுச்சேரியில் சூறாவளிக் காற்று எச்சரிக்கையால், கடற்கரையில் இருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை போலீசார் வெளியேற்றினர். வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கரையோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் புதுச்சேரி கடற்கரை சாலையில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மீறி கடற்கரை சாலைக்கு வந்தவர்களை காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து, அங்கிருந்து வெளியேற்றினர்.
Next Story