உயரும் கச்சா எண்ணெய் விலை! 1 பீப்பாய் விலை எவ்வளவு தெரியுமா?

கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஈடாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாததால், அனைத்து பெட்ரோலிய உற்பத்தி நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்குகின்றன.
x

2022 ஜனவரி ஒன்றாம் தேதி பீப்பாய் ஒன்றுக்கு 78 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது 119 டாலராக, 52 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆனால் பெட்ரோல் விலை ஜனவரியில் லிட்டருக்கு 101 ருபாயாக இருந்து மே மாதத்தில் 110 ரூபாய் வரை உயர்ந்து, வரி குறைப்பினால் தற்போது 102 ரூபாயக உள்ளது.

டீசல் விலை ஜனவரியில் லிட்டருக்கு 91 ருபாயாக இருந்து மே மாதத்தில் 101 ரூபாய் வரை உயர்ந்து, வரி குறைப்பினால் தற்போது 94 ரூபாயக உள்ளது.

IOC, HPCL, BPCL ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில் 8.8 ரூபாயும், ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் 12.9 ரூபாயும் நஷ்டமடைவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு விற்பனையில், சிலிண்டர் ஒன்றுக்கு

175 ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

செப்டம்பரில் முடிவடையும் காலாண்டில், இந்த மூன்று நிறுவனங்களின் மொத்த நஷ்டம் 80 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதே போல தனியார் உற்பத்தி நிறுவனங்களான ரிலையன்ஸ் மற்றும் நயரா நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விற்பனையில் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளன.

பல இடங்களில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பெட்ரோல் டீசல் விலையை நஷ்டம் ஏற்படாத அளவிற்கு அதிகரித்து, அத்துடன் அவற்றின் மீதான வரிகளை அதே அளவிற்கு குறைத்தால், பெட்ரோலிய நிறுவனங்கள்

நஷ்டமடைவதை தடுக்க முடியும் என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்