கிராமத்து சிறுமியின் அசத்தல் பவுலிங்..! மிரண்டு போன கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் | Cricket
ஜாகீர்கான்போல் பந்துவீசும் சிறுமியை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த சிறுமி சுசிலா மீனா, பந்துவீசும் காட்சிகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சச்சின், சுசிலாவின் பந்துவீச்சு அற்புதமாக இருப்பதாகக் கூறியுள்ளார். சுசிலாவின் பந்துவீச்சு ஸ்டைல் முன்னாள் வீரர் ஜாகீர்கானின் சாயலில் இருப்பதாகவும் சச்சின் குறிப்பிட்டுள்ளார். இதனை ஜாகீர்கானும் பகிர்ந்துள்ள நிலையில், வீடியோவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Next Story