ஜூனியர் ஆசிய கோப்பை - ஃபைனலில் இந்தியா தோல்வி
ஜூனியர் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் வங்கதேசத்திடம் இந்தியா தோல்வி அடைந்தது.
Vovt
துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் முகமது அமன் பவுலிங் தேர்வு செய்தார். தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 198 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் 199 ரன்கள் இலக்கை இந்தியா எளிதில் எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 9 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஆன்ட்ரே சித்தார்த் 20 ரன்களும் கார்த்திகேயா 21 ரன்களும் கேப்டன் முகமது அமன் 26 ரன்களும் எடுத்தனர். தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த இந்தியா 36வது ஓவரில் 139 ரன்களுக்கு சுருண்டது. 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேசம் ஜூனியர் ஆசியக் கோப்பையையும் வசப்படுத்தியது.
Next Story