கோவாக்ஸின் போட்டவர்கள் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும் மாற்றங்கள் யாருக்கெல்லாம் இந்த அறிகுறிகள் இருக்கு? ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
கோவிஷீல்டு மட்டுமல்ல கோவாக்ஸின் தடுப்பூசி போட்டு கொண்டவர்களும் பல பக்க விளைவுகளுக்கு ஆளாகியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது...அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
இந்தியாவில் கொரோனா தொற்றுக்குப் பிறகு குறிப்பாக இளம் வயதினர் பலரும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே சுருண்டு விழுந்து உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்தன.
ஒவ்வொரு முறையும் இந்த திடீர் உயிரிழப்புகளுக்கும் கொரோனா தடுப்பூசிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற விவாதம் எழுப்பப்பட்டது.
இந்த சமயத்தில் தான்... கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு ரத்தம் உறைதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம் என தயாரிப்பு நிறுவனமே ஒப்புக் கொண்டிருந்தது.
இந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மக்கள் மீளாத நிலையில், தற்போது கோவாக்ஸினும பல பக்கவிளைவுகளுக்கு காரணம் என ஆய்வில் தகவல் வெளியாகி இருப்பது மக்களிடையே மீண்டும் தடுப்பூசி குறித்த ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
GFX in
கடந்த ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரை என 18 மாதங்களாக கோவாக்ஸின் எடுத்து கொண்டவர்களை, ஓராண்டு ஆன பிறகு 926 பேரிடம் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது.
இதில் மூன்றில் ஒருவர் சில பக்கவிளைவுகளுக்கு ஆளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுவாசக் கோளாறு, தோல் சம்பந்தமான நோய்கள், நரம்பு சம்பந்தமான நோய்கள், தசை சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதில் குறிப்பாக கோவாக்ஸின் எடுத்து கொண்ட பெண்கள் மற்றும் ஏற்கனவே அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி எடுத்து கொண்ட பின் அதிக பாதிப்புக்கு ஆளாக வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதவிடாய் ஏற்படுவதில் மாற்றம், கண்களில் பாதிப்பு மற்றும் ஹைப்போ தைராய்டிசம் உள்ளிட்ட பாதிப்புகள் பெண்களிடம் கண்டறியப்பட்டுள்ளன.
ஆனால் காலதாமதமாக ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் குறித்து மேலும் புரிந்து கொள்ள கோவாக்ஸின் எடுத்து கொண்டவர்களிடையே நீண்ட கால ஆய்வு அவசியம் என்றும் இந்த ஆய்வு கோடிட்டு காட்டுகிறது.