காங்கிரஸ் அலுவலகத்தை சூறையாடிய பாஜகவினர்... தடியடி நடத்திய போலீசார்.. மும்பையில் உச்சகட்ட பரபரப்பு

x

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை, பாஜகவினர் சூறையாடியதால் பதற்றம் நிலவியது. காங்கிரஸ் கட்சி அம்பேத்கரை அவமதித்ததாக குற்றம் சாட்டி, பாஜகவின் இளைஞர் பிரிவினர் மும்பையில் போராட்டம் நடத்தினர். அப்போது காங்கிரஸ் அலுவலகத்திற்குள் புகுந்த பாஜகவினர். அங்கிருந்த பொருட்களை சூறையாடியதோடு, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரின் பேனர் மீதும் மை ஊற்றினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி பாஜகவினரை கலைத்தனர். காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரின் பேரில், போலீசார் காங்கிரஸ் அலுவலகத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்