ரெடியாகும் டெல்லி.. ஜன., உதயமாகும் `இந்திரா பவன்' - காங்., ஏற்பாடுகள் ஜரூர்

x

டெல்லியில் கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகமான இந்திரா பவன் எதிர்வரும் 15 ம் தேதி திறக்கப்பட உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி இந்த அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்கின்றனர். இந்த கட்டிடத்தில் காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை சித்தரிக்கும் வடிவங்கள் இடம்பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்