வார்த்தையை விட்ட அமித்ஷா..! காங்கிரஸ்- பாஜக இடையே பயங்கர மோதல்.. மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
பஞ்சாப் மாநிலம் சண்டிகர் மாநகராட்சி கூட்டத்தில், ஆம் ஆத்மி, காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கும் பாஜக கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சண்டிகர் மாநகராட்சியில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் மேயராகவும், பாஜகவை சேர்ந்தவர்கள் துணை மேயர்களாகவும் பதவி வகித்து வருகின்றனர். அம்பேத்கர் குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் தீர்மானத்தை முன்மொழிந்ததுடன், அவர் மன்னிப்பு கேட்டு, பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக கவுன்சிலர்கள், காங்கிரஸ் கட்சிதான் தொடர்ந்து அம்பேத்கரை அவமதித்ததாக குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றிய நிலையில், கைகலப்பு ஏற்பட்டது.
Next Story