அக்.30-ல் எழுதப்பட்ட முடிவுரை..60 ஆண்டு கால சகாப்தம் நிறைவு-ஒரே நாளில் காட்சி பொருளான 40,000 கார்கள்
- டாக்சி என்றவுடன் சட்டென நம் நினைவுக்கு வருவது, ஒன்று, வெள்ளை நிற யானையாக வலம் வந்த அம்பாசிடர் கார்கள், இன்னொன்று "பத்மினி" என்று செல்லமாக அழைக்கப்படும் பியட் கார்கள்..1960,70 காலகட்டங்களில் மக்களின் மனம் கவர்ந்த இந்த கார்களை இன்று கண்ணால் பார்ப்பதே அரிதாக மாறிவிட்டது..
- இத்தாலியை சேர்ந்த முன்னணி கார் தாயாரிப்பு நிறுவனமான பியட், இந்தியாவில் ப்ரீமியர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் பெயரில் 1964ஆம் ஆண்டு "பியட்-1100 டிலைட" என்ற பெயரில் கார்களை அறிமுகப்படுத்தியது.
- 1970கால கட்டங்களில் இந்த காரில் பல அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு "ப்ரீமியர் பத்மினி" என்ற பெயருடன் வலம் வர தொடங்கியது. அதிக சவுகரியம், குறைவான பராமரிப்பு செலவு, நம்பிக்கையான என்ஜின் என சாமானிய மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த்து.
- அன்று முதல் டாக்சி ஓட்டுனர்களின் நம்பர் ஒன் சாய்ஸ் ஆக மாறி, மும்பை உட்பட இந்தியாவின் பல நகரங்களில் சாலைகளை அலங்கரிக்க தொடங்கியது.
- நம்ம ஊரில் தான் இந்த காருக்கு பெயர் பத்மினி, மும்பையில் காலி-பீலி அதாவது மஞ்சள் ராணி என்றே செல்லமாக அழைக்கப்படுகிறது.
- மும்பை நகரின் கலாச்சாரத்தோடு பிண்ணிப் பிணைந்த பியட் பத்மினி கார்களை மையப்படுத்தி, 'டாக்ஸி எண். 9211', 'காலி-பீலி", 'ஆ அப் லௌட் சாலே"' உள்ளிட்ட பாலிவுட் திரைப்படங்கள் வெளியாகி சக்கைப்போடு போட்டுள்ளன.
- இந்நிலையில், மும்பையின் சாலைகளை அலங்கரித்த "பியட் பத்மினி" கார்களுக்கு அக்.30ம் தேதியோடு முடிவுரை எழுதப்பட்டுள்ளது..
- டாக்சி சேவைக்கு பெயர் போன மும்பையில், கருப்பு மஞ்சள் நிறத்தில் சாலைகளில் உலா வரும் பியட் கார்களை இனி பார்ப்பது அரிதான விஷயமாக மாற உள்ளது..
- ஆம்... மகாராஷ்டிரா மாநில அரசு கொண்டு வந்த, பழைய வாகனங்களுக்கு தடை சட்டத்தால், இனிமேல் "பியட் பத்மினி" கார்களை பயன்படுத்த அனுமதியில்லை.. அதிக மாசு ஏற்படுத்துவதை காரணம் காட்டி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடும் வாகனங்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது மகாரஷ்டிரா.
- மகாராஷ்டிராவில் கடைசியாக, கடந்த 2003ம் ஆண்டு அக்டோபர் வரை, பத்மினி கார்கள் பதிவு செய்யப்பட்டு வந்தன. அதற்கு பின், இந்த கார்களுக்கான பதிவு உரிமம் வழங்கப்படவில்லை.
- அந்த வகையில், கடந்த 30ஆம் தேதியோடு, 20 வருடங்கள் கடந்து விட்ட நிலையில், இனிமேல் "பியட் பத்மினி" கார்களை பயன்படுத்த அனுமதியில்லை..
- மும்பையில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பியட் பத்மினி கார்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், மும்பைவாசிகளின் உணர்வோடு இரண்டறக் கலந்த "பியட் பத்மினி" இனி காட்சி பொருளாக மட்டுமே இருக்க போகிறது..
Next Story