பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்னை வருகிறார்

x

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் கலந்து கொள்ள சென்னை வரும் பிரதமர் மோடியின் பயண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.அதன்படி, வரும் 28ஆம் தேதி பிற்பகல் அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் 4.45 மணியளவில் பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைய உள்ளார். விமான நிலையத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையார் விமான தளம் செல்லும் பிரதமர் அங்கிருந்து கார் மூலம் நேரு உள்விளையாட்டு அரங்கம் செல்கிறார். அங்கு செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியை தொடங்கி வைத்து நிகழ்ச்சியில் உரையாற்றிய பின்பு பிரதமர் மோடி இரவு ஆளுநர் மாளிகைக்குச் சென்று தங்குகிறார். அடுத்த நாள் காலை ஆளுநர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு காலை 10 மணியளவில் செல்லும் பிரதமர் மோடி...அண்ணா பல்கலைக்கழகத்தில் காலை 11.30 மணியளவில் சென்னை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் அகமாதபாத் செல்ல உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்