"இந்தியாவிற்குள் ஊடுருவல்.. மிகப்பெரிய சதி.. பின்னணியில் மத்திய அரசு'' - பகிரங்க குற்றச்சாட்டு

x

எல்லை பகுதிகளில் இருந்து, வங்கதேச ஊடுருவல்காரர்களை இந்தியாவிற்குள் அனுமதிப்பதாக எல்லை பாதுகாப்பு படையின் மீது மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். வங்கதேச ஊடுருவல்கார்களை அனுமதிப்பதின் மூலம், மேற்கு வங்கத்தை சீர்குலைக்கும் முயற்சி நடப்பதாக எல்லை பாதுகாப்பு படையினர் மீது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். நேற்று கொல்கத்தாவில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானார்ஜி, எல்லைப்பகுதிகள் வழியாக, வங்கதேச ஊடுருவல்காரர்களை இந்தியாவிற்குள் நுழைய அனுமதிப்பதாக எல்லை பாதுகாப்பு படையினர் மீது குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தை சீர்குலைக்கமுயற்சி நடப்பதாக கூறிய அவர், இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் மத்திய அரசின் பங்கும் இருப்பதாக தெரிவித்துள்ளார். இஸ்லாம்பூர், சிட்டாய், சோப்ரா உள்ளிட்ட இடங்களில் வழியாக இந்த ஊடுருவல் நடைபெறுவதாகவும், இது தொடர்பாக கடிதம் ஒன்றை மத்திய அரசுக்கு எழுத உள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் எல்லை பாதுகாப்பு படையினர் பெண்களை துன்புறுத்துவதாகவும், மாநில அரசின் அதிகாரிகள் அதை தட்டி கேட்பதில்லை என்றும் மம்தா பானா்ஜி குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்