நிதி வழங்க ஒப்புதல் எந்த மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு...?

x

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 5 மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 2024 ஆம் ஆண்டில் வெள்ளம்,நிலச்சரிவு,புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு நிதி வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி மொத்த தொகையான ரூ.1554.99 கோடியில் ஆந்திராவுக்கு ரூ.608.08 கோடியும், நாகாலாந்திற்கு ரூ.170.99 கோடியும்,ஒடிசாவிற்கு ரூ.255.24 கோடியும்,தெலுங்கானாவிற்கு ரூ.231.75 கோடியும், திரிபுராவிற்கு ரூ.288.93 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்