சனி, ஞாயிறு லீவு 5 நாள்தான் வேலை? 17 % இன்கிரிமெண்ட்.. ஜாக்பாட் அறிவிப்பு

x

சனி, ஞாயிறு லீவு 5 நாள்தான் வேலை? 17 % இன்கிரிமெண்ட்.. ஜாக்பாட் அறிவிப்பு... இன்ப அதிர்ச்சி கொடுக்கும் மத்திய அரசு

பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத ஊதிய உயர்வு அளித்து அதிரடி அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில், வாரத்திற்கு 5 நாள் பணி கோரிக்கையும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பல அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது மத்திய அரசு. இந்நிலையில், பொதுத்துறை வங்கி ஊழியர்கள் அடித்துள்ளது ஜாக்பாட்.

நீண்ட காலமாகவே ஊதிய உயர்வு மற்றும் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர் வங்கி ஊழியர்கள். இது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது..

இந்நிலையில் ஊழியர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளது மத்திய அரசு. அதன் படி ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது..

அந்த வகையில் வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் சங்கங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளன.

இந்த ஊதிய உயர்வு 2022 நவம்பர் மாதம் முன் தேதியிட்டு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதன்மூலம் 8 லட்சம் ஊழியர்கள் பயனடைவர் என கூறப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வால் பொதுத்துறை வங்கிகளுக்கு 8 ஆயிரத்து 284 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வங்கி அதிகாரிகள், பணியாளர்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட ஊதியம் 2022, நவம்பர் 1-ந்தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், 2022 அக்டோபர் 31-ந் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியத்துடன் மாதாந்திர கருணைத் தொகையும் கூடுதலாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இத்துடன், மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வேண்டிய கோரிக்கை, மாதத்தில் ஒரு நாள் மருத்துவ சான்றிதழ் அளிக்காமல் பெண்களுக்கு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளும் கையெழுத்தாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை மத்திய அரசு பரிசீலித்து விரைவில் அரசாணை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது..


Next Story

மேலும் செய்திகள்