"Pls இங்கே குடிக்காதீர்கள்..!" பங்க் ஊழியரை சுத்து போட்டு சரமாரியாக அடித்த கும்பல்.. வெளியான பகீர் வீடியோ
உத்தர்காண்ட் மாநிலம் முசோரி அருகே சுவாகோலியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் சிலர், அங்கே மது அருந்தியவாறு சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர்.
பெட்ரோல் நிரப்பும் ஊழியர் சூரஜ்மானி என்பவர் பெட்ரோல் நிலையத்தில் இருந்தபடி மது அருந்த வேண்டாம் என அவர்களிடம் கூறியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் தங்களின் நண்பர்களை வரவழைத்து பெட்ரோல் நிலைய ஊழியரை சரமாரியாக தாக்கினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், தாக்குதல் நடத்திய இளைஞர்களின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Next Story