நடுரோட்டில் பற்றி எரிந்த கார்! நூலிழையில் உயிர் தப்பிய ஐயப்ப பக்தர்கள்.. கேரளாவில் அதிர்ச்சி

x

கேரளாவின் பத்தனம்திட்டாவில், விபத்துக்குள்ளான கார் தீப்பற்றி எரிந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக அதிலிருந்த 5 பேர் உயிர்தப்பினர். தெலங்கானாவை சேர்ந்த 4 ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளனர். களஞ்சூர் பகுதியை கடந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒரு வீட்டின் மதில் சுவரில் மோதி தீப்பற்றி எரிந்துள்ளது. மளமளவென கார் முழுவதும் தீ பரவிய நிலையில், அதிலிருந்த 5 பேரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்