"அது என் உயிர் மூச்சு.. விடவே மாட்டேன்" - அடம்பிடித்த சுரேஷ் கோபிக்கு ரெய்டு விட்ட மோடி, அமித்ஷா

x

நடிகரும், மத்திய இணையமைச்சருமான சுரேஷ் கோபி இனி படத்தில் நடிக்கக் கூடாது என பாஜக தலைமை காட்டம் காட்டியுள்ளதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

பிரபல மலையாள நடிகரான சுரேஷ் கோபி, கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியை வென்றெடுத்து பாஜகவிற்கு வலு சேர்த்ததோடு, மத்திய இணையமைச்சர் பதவியையும் பெற்றார்...

தேர்தல் வெற்றிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, தான் நடிக்க ஒப்பந்தமான படங்களை நடித்து கொடுக்கவுள்ளதாகவும், ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக இருந்து எப்படி படங்களில் நடித்து வந்தேனோ, அப்படியே இப்போதும் நடிக்க முடியும் என நம்புவதாக தெரிவித்திருந்தார்.

இது மட்டுமன்றி, 20 முதல் 22 படங்கள் நடிப்பதற்கு அனுமதி கேட்டு கடிதம் வழங்கிய போது, அந்தக் கடிதத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டுகொள்ளாமல் விட்டதாகவும், நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டு பேசிய அவர், திரைப்படம் என்பது எனது விருப்பம், சினிமா இல்லாவிட்டால் நான் இறந்துவிடுவேன் எனக்கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய 250 வது படமான ஒட்டக்கொம்பன் படத்தில் நடிக்க அனுமதி கேட்டுள்ளதாக தெரிவித்த அவர், இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என குறிப்பிட்டு பேசியிருந்தார்.

இந்நிலையில், ஒட்டக்கொம்பன் படத்திற்காக தாடி வளர்த்து வந்த அவர் திடீரென கெட் அப் சேஞ்ச் செய்ததாக தகவல்கள் வெளியானது..

ஆனால், சுரேஷ் கோபி படங்களில் நடிக்க அமித்ஷா மட்டுமன்றி பிரதமர் மோடியும் அனுமதி மறுத்துள்ளதாக பேசப்படுகிறது...

படங்களில் நடிப்பதற்கு பாஜக தலைமையில் இருந்து காட்டமாக பதிலே வந்துள்ளதால், அவர் மத்திய அமைச்சர் பதவிக்கான பணிகளில் மட்டுமே முழுவீச்சில் பணிகளை மேற்கொள்வார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது..

இதனால் தனது மூச்சாக கருதிய திரையுலகில் இருந்து சுரேஷ் கோபி விலகியுள்ளதாக கூறப்படும் நிலையில், ஒட்டக்கொம்பன் படம் கைவிடப்பட்டு விட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்