அரசியல் கட்சிகளின் வருமானம்.. முதலிடத்தில் பாஜக - எவ்வளவு தெரியுமா?
பா.ஜ.க.வின் ஆண்டு வருமானம் 83 சதவீதம் அதிகரித்து 4 ஆயிரத்து 340 கோடியாக உயர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2023- 2024ஆம் நிதியாண்டுக்கான வருவாய் கணக்கை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது. அதன்படி, தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆயிரத்து 685 கோடி ரூபாய் பா.ஜ.கவிற்கு வருவாய் கிடைத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் காங்கிரஸ் கட்சியின் ஆண்டு வருமானம் 452 கோடியில் இருந்து ஆயிரத்து 225 கோடியாக உயர்ந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சி 685 கோடியும், மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 612 கோடியும் வருவாய் ஈட்டியுள்ளன.
Next Story