நாடு முழுவதும் நடந்த இடைத்தேர்தல் முடிவு - காங்.க்கு எதிர்பாரா ஷாக்

x

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி வெற்றி பெற்றுள்ளது.

நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 48 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 26 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 10 தொகுதிகளிலும் இதர கட்சிகள் 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

அஸ்ஸாம் மாநிலத்தில் போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும், பிஹார் மாநிலத்தில் நான்கு தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

சத்தீஸ்கர், குஜராத் மாநிலங்களில் தலா ஒரு தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

கேரளாவில் பாலக்காடு மற்றும் செல்லக்கரா தொகுதிக்கு இடைத்தேர்தலில் ஒன்றில் காங்கிரசும் மற்றொன்றில் சிபிஎம் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.

மேகாலயாவில் கேம்பெக்ரே சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தானில் 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், 5 தொகுதிகளில் பாஜகவும் ஒரு தொகுதியில் காங்கிரஸும் மற்றொரு தொகுதியில் பாரத் ஆதிவாசி கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.

சிக்கிம் மாநிலத்தில் இரண்டு தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் போட்டி இன்றி வெற்றி பெற்றுள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் 9 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 7 தொகுதிகளில் பாஜகவும், 2 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சியும் வெற்றி பெற்றுள்ளது


Next Story

மேலும் செய்திகள்